திருவாடானை அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ‘தேளூர் கிராமத்தில் 52 குடும்பங்கள் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஆறு வருடமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது.
இது தொடர்பாக, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது பணம் செலவு செய்து விலை கொடுத்து குடிநீர் வாங்குவதாகவும் அப்படி வாங்கி குடிக்கும் தண்ணீரினால் நோய் தொற்று அபாயம் இருப்பதாகவும், பலர் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் நிலையில்,
ஆத்திரமுற்ற இப்பகுதி மக்கள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் வந்து முற்றுகையிட்டனர். இதனால் இங்கு பரபரப்பு நிலவியது.
மேலும், புகார் மனு கொடுக்க வந்த நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர். அதிகாரிகள் யாரும் இதுவரை வரவில்லை, குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் இதே நிலைமை நீடித்தால், வரும் காலங்களில் பல்வேறு போராட்டங்களை கையில் எடுக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து சென்றனர்.
You must be logged in to post a comment.