மணிமுத்தாறு நீர்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு; சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு திறந்து வைத்தார்..
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு பிரதானக் கால்வாயில் பிசான சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் ஆகியோர் முன்னிலையில் 10.01.2024 அன்று தண்ணீர் திறந்து வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு. அப்பாவு செய்தியாளர்களிடம், தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பிரதானக் கால்வாய் பாசன விவசாயப் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு நடப்பாண்டிற்கான (2023-2024) முன்னுரிமை பகுதியான 1-வது மற்றும் 2-வது ரீச்சுகளை சார்ந்த 11,134 ஏக்கர் மறைமுக பாசன நிலங்களுக்கும் மற்றும் அணையில் முழு கொள்ளளவு உள்ளதால், 3-வது 4-வது ரீச்சுகளை சார்ந்த 12,018 ஏக்கர் மறைமுக பாசன நிலங்களுக்கும் ஆக மொத்தம் 23,152 ஏக்கர் நிலங்களுக்கு 445 கன அடி வீதம் 10.01.2024 முதல் 31.03.2024 முடிய 82 நாட்கள் பிசான பருவ சாகுபடி செய்வதற்காக மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
மேலும், எதிர்வரும் நாட்களில் தாமிரபரணி பாசனத்திற்கு மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் உள்ள தண்ணீர் தேவைப்படும் பட்சத்தில் விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும் எனவும் விவசாயப் பெருமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. எனவே, விவசாய பெருமக்கள் தண்ணீரை மிக சிக்கனமாக பயன்படுத்தவும், நீர் விநியோக பணியில் நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விவசாய பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், தாமிரபரணி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், தாமிரபரணி வடிநில கோட்டம் செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் ஆவடி நாயகம் முருகன், உதவி பொறியாளர்கள் மாரியப்பன், தினேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.