ஆலங்குளம் அருகே சென்னையிலிருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்…

ஆலங்குளம் அருகே சென்னையிலிருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி-தடுப்பு கண்காணிப்பு பணிகள் தீவிரம்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரிசோதனைகள், பாதிப்புகள், டிஸ்சார்ஜ் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று ஒரே நாளில் 16829 பரிசோதனை செய்யப்பட்டதில், 1875 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னை வடபழனியில் இருந்து நேற்று ஊருக்கு வந்த ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் அழகாபுரி பாபநாசம் புரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது தெரியவந்தது.

இதையடுத்து ஆலங்குளம் தாசில்தார் பட்ட முத்து உத்தரவின் பேரில் அந்த பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கடைகளையும் அடக்க உத்தரவிட்டு அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு இப்பகுதி சுகாதாரத்துறையினரின் முழு கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!