தென்காசி மாவட்டத்தில் திமுக சார்பில் 300 நபர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கல்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வடக்கு ஒன்றியம் வாடியூர் ஊராட்சி பரங்குன்றாபுரத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 300 நபர்களுக்கு அரிசி காய் கறிகள் வழங்கல் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளை கழக செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் செல்வம், துணை செயலாளர் ஆனந்த் ஒன்றிய பிரதிநிதி பரமசிவம், அருமைக்கனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கொடி ஏற்றி 300 நபர்களுக்கு அரிசி, காய்கறி, வழங்கினார்.
நிகழ்ச்சியில் கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் சேக் முகம்மது, மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் வளன் அரசு, துணை அமைப்பாளர் மரியராஜ், வர்த்தகர் அணி கபில்தேவதாஸ், தொண்டரணி செல்வம் மாணவரணி அருள் ஜூலியஸ், ஊராட்சி செயலாளா மாடசாமி, மாரிச்சாமி, பால்ராஜ், ராஜன், நடராஜன், பன்னிர், ரமேஷ், வயத்துகுட்டி, செல்வராஜ், முருகன், தினேஷ், ராஜ், நந்தகுமார், அன்பழகன், ஜெயபால், கண்ணன் அந்தோணிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.