சுரண்டை காவல்துறை சார்பில் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

சுரண்டை காவல்துறை சார்பில் சுரண்டை சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தென்காசி மாவட்ட எஸ்பி சுகுணா சிங் ஆலோசனையின் பேரில் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வர வலியுறுத்தி வரும் நிலையில், சுரண்டை பேருந்து நிலைய சாலையில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள ஒலி பெருக்கி மூலம் சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் எஸ்ஐ ஜெயராஜ், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் ஜேக்கப், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் அழகுசுந்தரம், ரமேஷ், சண்முகவேல்,  வேலாயுதம், ஓலி பெருக்கி உரிமையாளர் சங்க நிர்வாகி ஜெகன், போட்டோ ஸ்டுடியோ சங்க நிர்வாகி கிருபாகரன், மன்னா டிரஸ்ட் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!