திமுக சார்பில் ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்..

திமுக சார்பில் ஈழத்தமிழர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்..

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கொரோனா நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. சுந்தரேசபுரம், ஈழத்தமிழர் குடியிருப்பில் உள்ள 150 குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு அடங்கிய தொகுப்பு-பை வழங்கப்பட்டது.

நலத்திட்ட நிவாரண உதவிகளை திமுக மாநில வர்த்தகர் அணி துணைத் தலைவர் டாக்டர் எஸ்.அய்யாத்துரை பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சுந்தரேசபுரம் ஈழத்தமிழர் முகாம் தலைவர் பிரான்சிஸ், நாட்டாமை கமலஹாசன், கலைச்செல்வன், வெங்கடேஷ், சமூக ஆர்வலர் லதா,வாசுதேவநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆ.ரவிசங்கர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம், முன்னாள் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளரும்,தென்காசி ஜமாத் தலைவருமான இஞ்சி இஸ்மாயில், செங்கோட்டை ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இசக்கித்துரை, செங்கோட்டை ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் முத்துக்குமார், திமுக ஒன்றிய பிரதிநிதி விஸ்வநாதபுரம் பேச்சிமுத்து, இலஞ்சி பலவேசம் வாசு துரைபாண்டியன், புதுக்குடி வழக்கறிஞர் மாரியப்பன், டாக்டர் கலைஞர் கல்வி அறக்கட்டளை செயலாளர் பிரகாஷ் வழக்கறிஞர் ஆகாஷ்பாண்டியன் வன்னிக்கோனேந்தல் களஞ்சியம் பவுண்டேஷன் பசுபதிபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!