கொரோனா பரவல் தடுப்பு;2 வது நாளாக தொடரும் முழு ஊரடங்கு- காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..

கொரோனா பரவல் தடுப்பு;2 வது நாளாக தொடரும் முழு ஊரடங்கு- காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு..

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் 3 நாட்கள் தொடர் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டது.தொழில் நகரம் முடக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்றும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பால், மெடிக்கல், மருத்துவமனைகள் மட்டும் திறந்திருந்தன.

அவசியமில்லாத வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை ‌. பொதுமக்களின் நடமாட்டமும் வெகுவாகவே குறைந்திருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

விவசாய பணிகள் வழக்கம் போலவே நடந்தன. வீ.கே புதூர் தாசில்தார் ஹரிஹரன், சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி மற்றும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!