மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு அமமுக சார்பில் நிவாரண உதவி வழங்கல்…
வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணை பகுதியில் பழங்குடியின குடும்பங்களுக்கு நெல்லை மாநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள தலையணையில் வசித்துவரும் பழங்குடியினர் 130 நபர்களுக்கு நெல்லை புறநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவையின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
நிவாரணமாக 5 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் எண்ணெய் பொருட்கள் பன்னிரண்டு சிறிய பிஸ்கட் பாக்கெட்டுகள் அடங்கிய பிஸ்கட் பாக்கெட்டுகள் நெல்லை புறநகர் வடக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பொறியாளர் ஈ. மகேஸ்வரன் வழங்கினார்.
இந்தியா முழுவதும் வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி 54 நாட்களாக உள்ள நிலையில், தங்களது அவசியத் தேவைகளுக்காகவும் தங்களின் அன்றாட வாழ்விற்கு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சி அடிவார பகுதியில் வசித்து வரும் பழங்குடியினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அங்கு வசித்து வரும் 130 பழங்குடியினர் மக்களுக்காக மாவட்ட அம்மா பேரவை சார்பாக அங்கு வசித்து வரும் 130 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மளிகைப் பொருட்கள் எண்ணெய் வகை பொருட்கள் பிஸ்கட்டுகள் பாக்கெட்டுகள் அடங்கிய தொகுப்பினை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பேரவை செயலாளர் பொறியாளர் ஈ.மகேஸ்வரன் தனது சொந்த செலவில் வழங்கினார்.
புறநகர் வடக்கு மாவட்ட மகளிரணி தகவல் தொழில்நுட்பத் பிரிவு செயலாளர் பொறியாளர் கவிதா, வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் சாமிதுரை மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் மாரி முத்துக்குமார் திருமலாபுரம் ஊராட்சி செயலாளர் காளிதாஸ் மற்றும் முன்னாள் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ஈஸ்வரன் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









