முக கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ.100 அபராதம்-கடையநல்லூர் நகராட்சி ஆணையர் அதிரடி அறிவிப்பு..
கடையநல்லூர் பகுதியில் மாஸ்க் அணியாமல் ஊர் சுற்றினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என கடையநல்லூர் நகராட்சி ஆணையர் தங்கபாண்டி அறிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் தாசில்தார் அழகப்பராஜா தலைமையில் ஆணையாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு முகக்கவசம் இன்றி தேவையில்லாமல் வெளியில் சுற்றிவரும் நபர்களுக்கு ரூபாய் 100 அபராதம் விதித்தனர்.
நகராட்சி ஆணையர் கூறுகையில்,முகக்கவசம் இன்றி,அவசிய தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், கொரானா பாதிப்பு இதுவரை நமது பகுதியில் இல்லை. இனியும் வரவிடாமல் பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பே மிக அவசியம் எனவும்,சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் நம்மை நெருங்காதவாறு விழித்திருங்கள் வீட்டிலிருங்கள் ! எனவும் ஆணையர் தங்கபாண்டி அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் சேகர் மாரிச்சாமி மற்றும் தூய்மை பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









