டாஸ்மாக் திறப்பு அன்றே அரங்கேறிய வெட்டு கலாச்சாரம்-மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது…
தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறந்ததால் நேற்று முதல் வெட்டு, குத்து, சண்டை, கைகலப்பு உள்ளிட்ட பணிகள்!!! அரங்கேறத் துவங்கியது.
சுரண்டை அருகே குடித்ததை கண்டித்த மனைவி அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சேர்ந்தமரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்(48).பழைய இரும்பு கடையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மல்லிகா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர்.
குடிக்கு அடிமையாக இருந்து உழைப்பின் பெரும் பகுதியை டாஸ்மாக் கடைக்கு தாராளமாக வழங்கி வந்த இவர், கொரோனா தடுப்பு ஊரடங்கினால் 43 நாட்களாக குடிக்காமல் இருந்து கிடைக்கிற சில வேலைகளை பார்த்து அதை குடும்பத்தின் சாப்பாடு மற்றும் செலவிற்க்கு கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடை திறந்ததால் காலையிலேயே குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவரது மனைவி டாஸ்மாக் கடைக்கு செல்ல கூடாது என தடுத்துள்ளார். அதை மீறி குடித்து விட்டு வந்ததால் இச்செயலை மனைவி கண்டித்துள்ளார். இதில் சண்டை வந்து நான் அப்படித்தான குடிப்பேன் என கூறிக்கொண்டு மீண்டும் குடித்துள்ளார்.
இதனால் மீண்டும் மனைவி கண்டிக்கவே நான் குடிப்பது எனது உரிமை என கூறி அரிவாளால் மனைவி மல்லிகாவை தலையில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மல்லிகா சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் சேர்ந்தமரம் போலீசிற்கு தகவல் கொடுத்து போலீசார் விரைந்து வந்து பலத்த காயமடைந்த மல்லிகாவை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த எஸ்ஐ திணேஷ் பாபு கணவர் ராஜ் ஐ கைது செய்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார். டாஸ்மாக் திறந்த முதல் நாளே நடந்த வெட்டு சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மூடப்பட்டிருந்த 43 நாட்களும் அமைதியாக அன்பாக இருந்த கோடிக்கணக்கான குடும்பங்களில் நேற்று முதல் மீண்டும் புயல் வீச தொடங்கியுள்ளது. பல இடங்களில் குடித்து விட்டு பலர் ரோட்டில் விழுந்து கிடந்தனர். மாலை 5 மணிக்கு பின்னரும் பல இடங்களில் அரிவாள் மற்றும் கம்புகளை வைத்து ஆக்ரோஷமான சண்டைகள் நடந்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. விபத்துகளும் ஆங்காங்கே நடந்துள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.