தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு நடவடிக்கையை கண்டித்தும்,நிவாரண உதவிகள் சரிவர வழங்காத மத்திய அரசை கண்டித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசின் டாஸ்மாக் திறப்பு நடவடிக்கையை கண்டித்தும்,நிவாரண உதவிகள் சரிவர வழங்காத மத்திய அரசை கண்டித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில்,தமிழகத்தில் டாஸ்மாக் கடையை இன்று முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கு பொது மக்கள்,பெண்கள்,சமூக ஆர்வலர்கள்,அரசியல் கட்சியினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நிவாரண உதவிகளை சரிவர வழங்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆணையின் பேரிலும், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் அறிவுறுத்தலின் படியும், 07-ஆம் தேதி இன்று காலை 10 மணியளவில் சுரண்டையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி நாடார் தலைமையில் சமூக விலகலுடன் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் ஜெயபால், மாவட்ட துணை தலைவர் பால் என்ற சண்முகவேல், மாநில பேச்சாளர் பால்துரை, நாட்டாமை ராமராஜன், சோனியா பேரவை பிரபாகர் வட்டார காங்கிரஸ் தெய்வேந்திரன், ஊடகபிரிவு சிங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வன், அருணாசலக்கனி, மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும்,ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையிலும் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் தமிழக அரசின் டாஸ்மாக் திறக்கும் நடவடிக்கையால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பல்வேறு முறைகளில் தங்களின் எதிர்ப்புகளையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!