திமுக சார்பில் 1000 ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவி-சமூக விலகல் பேணி வழங்கல்…
சுரண்டை திமுக சார்பில் 1000 ஏழை எளிய குடும்பங்களுக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியோர் கொரோனா நிவாரணமாக அரிசி வழங்கினர்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் 1000 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக அரிசி வழங்கப்பட்டது.
சுரண்டை பேருந்து நிலையத்தில் சமூக விலகலுடன் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார். சுரண்டை மகாலட்சுமி மருத்துவமனை டாக்டர் .முருகையா முன்னிலை வகித்தார். திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆட்டோ மற்றும் டூரிஸ்ட் வேன், கார் டிரைவர்கள் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் 1000 குடும்பங்களுக்கு அரிசி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி அப்துல்காதர், இளைஞரணி ஆறுமுகச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி சுதன்ராஜா, கோ.சாமித்துரை தொண்டரணி.முருகன், துவரங்காடு முருகன், மீனவரணி ஜேம்ஸ், கு. ஆறுமுகச்சாமி, சுப்பிரமணியன், பூல்பாண்டியன், இளைஞரணி .சங்கர பாண்டியன், ஜெயராஜ், ராமர், சாமுவேல் மனோகர், சீனிவாசன்,அருணா, கணேசன், சசிகுமார், முத்துச்சுப்பிரமணியன், செல்வன், பவுன்ராஜ், செல்வராஜ், மாடசாமி, பிரேம்குமார், மாறன், கோமதிநாயகம், கொடி கோபால கிருஷ்ணன், குமார், மாரியப்பன், பிரபு, கணேசன், முத்துமணி, செல்வம், வைகை கணேசன், கோபால், துரைநாதன், எழில், ஞானசீலன், சங்கரேஸ்வரன், தங்கேஸ்வரன், இன்சூரன்ஸ் சார்லஸ், அரவிந்த் சிதம்பரம், அருணா செல்வன், சங்கர நயினார், சண்முக குமார், அழகுசுந்தரம், சொசைட்டி முருகன், சொசைட்டி செல்லத்துரை, கோட்டி ராஜ், முத்துக்குமார், முருகன், பண்டாரம், பண்டாரச்சாமி, மீசை முருகன், ராமசாமி, மணல் மாரியப்பன், ராஜேந்திரன், சுடலை முத்து, யாஷர் அரபத், சுவைபு, அன்சாரி, சண்முகசுந்தரம், கேபிள்அழகு, பந்தல் ஆறுமுகச்சாமி, கபில்வாசன், ஆனந்த் வழக்கறிஞர், ஜீலியஸ், டிரைவர் சேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பெற்றனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









