சுரண்டை சிவகிரி பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கல்….
சுரண்டையில் திமுக வர்த்தக அணி மாநில துணைத் தலைவர் அய்யாத்துரை பாண்டியன் 750 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவினால் வேலை இழந்து வருமானமின்றி உணவிற்கு சிரமப்படும் ஏழை எளியவர்கள், ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், வறுமையில் உள்ளோர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு திமுகவினர் உதவ வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார் அதற்கு ஒன்றினைவோம் என்ற திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி திமுக மாநில வர்த்தக அணி துணை தலைவரும் சங்கரன்கோவில் கல்விதந்தையுமான அய்யாத்துரை பாண்டியன் தனது சொந்த நிதியில் இருந்து மூன்றாவது கட்டமாக சுரண்டையில் உள்ள 750 குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் முககவசம் வழங்கி கொரோனாவை தடுக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமலும், தவிர்க்க முடியாத நிலையில் வெளியே வந்தாலும் முககவசம், கையுறை அணிந்து வரவும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவும் வேண்டும். கொரோனாவை தடுப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம் எனவும் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட வர்த்தகர்அணி அமைப்பாளர் முத்துக்குமார், வழக்கறிஞர் அணி முத்துராமலிங்கம், தினகரன், நெல்லை ரமேஷ், , பசுபதி பாண்டியன், செந்தில், ஆகாஷ் பாண்டியன், மாரிச்செல்வம், ,, கீழப்பாவூர் ஒன்றிய துணைச்செயலாளர் நெ.ஸ்டீபன் சத்யராஜ், சுரண்டை பேரூர்க் கழகப் பொருளாளர் மு.ஜெயராஜ், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பு.பரமசிவன், சுரண்டை பேரூர் கழகத் துணைச்செயலாளர் பூல்பாண்டியன், மாவட்ட மு.கலை, இலக்கியப் பேரவை துணைச்செயலாளர் ஏ.ஏ.ரத்தினசாமி, நகர சிறுபான்மைப் பிரிவு எ.சேக்மைதீன், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் ஜேம்ஸ், மெரிட்டன், ஜோதிடர்.எஸ்.ஏ. தங்க இசக்கி, ரா.அருணா, கே.பண்டாரச்சாமி, ஏ.அழகுசாமி, எஸ்.முருகேசன், ஆர்.கணேசன், கோமதிநாயகம், இளைஞர் அணி அழகுசாமி, மணி, கோமதிநாயகம் கணேசன், பாலா, பண்டாரச்சாமி, ஸ்டீபன்ராஜ், கணபதி மற்றும் கழக முன்னோடிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து கலந்து கொண்டனர்..
மேலும்,சிவகிரி பேரூராட்சி பகுதியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நெல்லை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி மற்றும் மளிகை பொருட்களை நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ.சிவபத்மநாதன் சிவகிரி நிர்வாக அலுவலர்களிடம் வழங்கினார்.
நெல்லை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் சார்பில் சிவகிரி பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சுகாதார, மஸ்தூர் பணியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் திமுக தொண்டர்கள் குடும்பத்தினர்கள் உட்பட 100 பேர்களுக்கு திமுகவின் நெல்லை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் பொன்ராஜ் சார்பில் வழங்கப்பட்ட 5 கிலோ கொண்ட அரிசிபை மற்றும் மளிகை பொருட்கள், துவரம் பருப்பு எண்ணெய் வகைகள் உப்பு உட்பட 500 ரூபாய் மதிப்புள்ள சமையலுக்கு தேவையான10 பொருட்கள் அடங்கிய பொருட்களை நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ. சிவ பத்மநாதன் வழங்கினார்.
சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தனுஷ் எம்.குமார் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் முத்தையா பாண்டியன் மாநில செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், நெல்லை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் மருதப்பன், துணைச் செயலாளர் வழக்கறிஞர் பொன்ராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மனோகரன் மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி,மாவட்ட துணைச் செயலாளர் மாடசாமி, நெல்லை மாவட்ட கலைஞர் பகுத்தறிவு பாசறையில் துணை அமைப்பாளர் நல்லசிவன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் மெடிக்கல் சுந்தர் நெல்லை மாவட்ட மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர்சுமதி, வாசுதேவநல்லூர் ஒன்றிய துணை செயலாளர் மாரி துரை, வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சரவணன், ராயகிரி பேரூர் செயலாளர் குருசாமி, வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் சரவணன், சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் லெனின், சிவகிரி பேரூர் அவைத் தலைவர் கதிரேசன், பொருளாளர் சி எஸ் மணியன் அழகு மாரியப்பன், சீமான் கவுதம் , தங்கம் என்ற கருப்பையா, கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் இலவரசன் கணேசன் முத்தையா ஜெயச்சந்திரன் மாரியப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நெல்லை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஏற்பாடுகளை நெல்லை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பொன்ராஜ் செய்திருந்தார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









