எய்ம்ஸ் பணிகள் விரைவில் துவங்க மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவேன்- மதுரை விமான நிலையத்தில் தேனி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு:
எய்ம்ஸ் தாமதமானதற்கு ஜைக்கா நிறுவனம் தான் காரணம். இனி வேகமாக வேலைகள் நடைபெறும். வரக்கூடிய கூட்டத்தொடரில் இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து விரைவாக பணி தொடங்குவதற்கு கோரிக்கை வைப்பேன்.
வெள்ள பாதிப்பு நிதிக்கு மத்திய அரசு வலியுறுத்துவீர்களா என்ற கேள்விக்கு:
தற்போதைக்கு 450 கோடி கொடுத்துள்ளார்கள் இன்னும் என்ன தேவை உள்ளதோ அது குறித்து வலியுறுத்துவேன்.
ராமர் கோயிலுக்கு அழைப்பு உள்ளதா என்ற கேள்விக்கு:
தற்போது தான் டெல்லி செல்கிறேன் அழைப்பு வந்திருக்கும், போகும்போது சொல்கிறேன்.
ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி குறித்த கேள்விக்கு:
பொது இடத்தில் அது குறித்து நான் கருத்து கூறினால் சரியாக இருக்காது.
மீண்டும் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு:
அதற்கு இன்னும் நேரம் உள்ளது. எல்லாவற்றுக்குமே தை பிறந்தால் வழி பிறக்கும்.
இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என கூறுவது குறித்த கேள்விக்கு:
அவர்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என அனைவருக்குமே ஆசை இருக்கும் ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.
பண்டிகை காலத்தில் விமான கட்டணங்கள் உயர்வு குறித்த கேள்விக்கு:
அது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு எம்பி கேள்வி எழுப்பியிருந்தால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்கள். ஆனால் அது மக்களை பாதித்தால் இது தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சந்தித்து கட்டுப்பாட்டில் இருக்க வலியுறுத்துவேன்.
தமிழக மாணவர்களை இலங்கை சிறை பிடித்துள்ளது குறித்த கேள்விக்கு:
காலம் காலமாக நடந்து வருகிறது அதற்கு நிரந்தர தீர்வு இழந்த கட்சி தீவை மீட்க வேண்டும். இந்த முறை பிரதமரை சந்திக்கும் போது மீண்டும் வலியுறுத்துவேன்.
செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









