சீட்டிங் பார்ட்டி, டோக்கன் பார்ட்டி என தினகரனை விமர்சனம் செய்த தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன்..

 

தேனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் அலங்காநல்லூர் பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

பின்னர் அங்கு கூடி நின்ற பெண்களிடம்  தங்கதமிழ்செல்வன் பேசியதாவது;

இது பிரதமர் தேர்தல் அல்ல MP தேர்தல் எம்பிக்கள் எல்லாம் சேர்ந்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்.

என்னை எதிர்த்து போராடும் சீட்டிங் பார்டி டோக்கன் பார்டி எல்லாம் உங்களிடம் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் இது பிரதமருக்கான தேர்தல் அல்ல.

மாதம் ரூ. 5 ஆயிரம் மிச்சம் பண்ணலாம் தாயி பெட்ரோல், டீசல், கேஸ், மகளிர் உரிமைத் தொகை, என அனைத்து திட்டங்களிலும் பெறும் தொகை மூலம் மாதம் ஒரு குடும்பம் 5 ஆயிரம் மிச்சம் பண்ணலாம்.

மற்ற கட்சிகாரர்கள் வருவாங்க, சீட்டிங் காரங்க, எதையும் நம்பிடாதீங்க வடிவேல் பாணியில் எதையும் நம்பி ஒட்டு போட்டுறாதீங்க.

தங்க தமிழ் செல்வனுக்கு வாக்களித்தால் நலத்திட்ட உதவிகள் சோழவந்தான் தொகுதிக்கு தேடி வரும் என  கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!