தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை அருகே இரு தரப்பினரிடையே மோதல் பொதுமக்களிடையே பரபரப்பு..
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தென்கரை கள்ளிப்பட்டியில் மாணிக்க விநாயகர் கோவில் பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு சமூகத்தினர் வாழும் பகுதியை கடந்து செல்லும் போது எங்க தெருவு பக்கம் ஏன் வர்றீங்க என்று வாக்குவாதம் ஆனதால் அப்படியே கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த தென்கரை காவல் நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் நேற்று நள்ளிரவு பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகம் சம்பவம் நடந்த இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார். பின்னர் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தார் மேலும் இரு தரப்பினரின் நடந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து தென்கரை காவல் நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர் .இதில் ஒரு தரப்பினர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் சம்பவம் நடந்த பகுதியில் இருதரப்பினர் வாழும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .இப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுறது. அதனைத் தொடர்ந்து இன்று இருதரப்பினரிடையே பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் அவர்கள் தலைமையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.
சாதிக் பாட்சா, நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.