சட்ட மேதை அம்பேத்கர் பற்றி முகநூலில் ஆபாசபதிவு நடவடிக்கை எடுக்க கோரி வி.சி.க.வினர் மனு!
தேனி கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்கைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் தலைமையில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் வடிவேல்முருகன் என்ற வசுமித்ரா என்பவர் தனது முகநூலில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி ஆபாசமான கருத்துக்களை பதிவுகளை பதிவு செய்துள்ளார். இவை சமுதாய மோதல் போக்கை உருவாக்குவது போல உள்ளதாகவும், தலைவர்களை அவமதிப்பு செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரிந்தும் திட்டமிட்டே அவற்றை செய்துள்ளார் எனவும், சட்ட மாமேதை ,புரட்சியாளரது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துக்களை பதிவிட்ட நபர் மீது மாவட்ட காவல் துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்திருந்தது. இந்நிகழ்வின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.தமிழ்வாணன், செங்கதிர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பா.சி.முத்துக்குமார். மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், செங்கதிர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் அருந்தமிழரசு, சமூக நல்லிணக்க பேரவை தலைமை ஒருங்கிணைப்பார் முகமது சபி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் சிவனேசன் , பெரியகுளம் சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் வடுகை. ஆண்டவர், தேனி நகரச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









