தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் குள்ளப்ப கவுண்டன் பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்னும் விவசாயி தனது விவசாய நிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பணிகளை மேற்கொண்டிருந்த போது 3 அடி பள்ளத்தில் சில முதுமக்கள் தாழி இருந்ததை கண்டு அதனை பத்திரமாக வெளியில் எடுத்து தேனி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதனை கேள்விபட்டவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் செயலாளர் நாகராஜன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கம்பம் துனை செயலாளர் மணியரசன், மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயளாலர் K.R.லெனின் அந்த இடத்திற்க்கு சென்று பார்வையிடும் பொழுது அந்த இடத்தில் மட்டுமல்ல அதன் பக்கத்து தோட்டங்களிலும் சில வருடங்களுக்கு முன்பாக சில பொருள்களை எடுத்துள்ளதாக பக்கத்து தோட்டத்து விவசாயி தவராஜ் சொல்லி கொண்டிருந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த ஆகாஸ் என்னும் இளைஞன் “இதுமட்டுமல்ல சில கல்வெட்டுகளும் இருப்பதாக அங்கிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் ஆற்றங்கரை அழைத்து சென்று காண்பித்தார் அங்கு சில கல்வெட்டுகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வைகை நதிக்கரையில் தமிழ் சமூகம் வாழ்ந்ததற்க்கான அடையாளத்தை உலகத்திற்க்கு எடுத்து காட்டி கொண்டிருக்கும் கீழடியில் இருந்து சுமார் 170 கிமி தொலைவில் இத்தனை அடையாளங்கள் கிடைப்பது தமிழ் சமூகத்தின் சங்ககால வாழ்விட தடையங்களாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகரித்து இருக்கிறது.
தமிழக தொல்லியல் துறை மூலமாக அகழாய்வு செய்ய தமிழக அரசு முன்வரவேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் – அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
A.சாதிக்பாட்சா. நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









