தேனி சமூக சேவகரை பாராட்டி வாழ்த்துக்கள் கூறிய கேரளா முதல்வர் பிரனாய் விஜயன்!
தேனி மாவட்டம் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு வெளி ஆதார முறையில் தேசிய குழந்தைகள் நல திட்டத்தில் வேலை செய்யும் மருந்தாளுநர் ந.ரஞ்சித்குமார், 266 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை, மற்றும் 106க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு உடன் சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய உதவியுள்ளார்.மேலும் தாலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை தன் இரத்தத்தை தானம் செய்து உதவி வருகிறார்.இரத்த வங்கிக்கு தேவைப்படும்போது முகாம் அமைத்து ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறார்.இவர் மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்து சமூகப் பணி ஆற்றி வருகிறார்.இவர் கொரோனா ஊரடங்கு நாள் முதல் மலைவாழ் மக்கள், பார்வையற்றோர், முதியவர்களுக்கு தினமும் உணவு சமைத்தும்,கபசுர குடிநீர் வழங்கியும் தேவையான உதவி செய்து வருகிறார். பொதுமக்கள், அரசின் உயர் அதிகாரிகள் பாராட்டி வழ்த்துகின்றனர். தற்போது இவர் தன்னுடைய வருமானத்தை ஏழைகளுக்கும் ஆதரவற்றோர்க்கும் உதவி செய்து வருகிறார்.இவரது சேவையை ட்விட்டரில் பார்த்த கேரளா முதல்வர் பிரனாய் விஜயன் வாழ்த்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.


You must be logged in to post a comment.