தேனி மாவட்டம் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் 09.03.2024 அன்று நடைபெற உள்ளது..
தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவினால் வரும் 09.03.2024-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட உள்ளது.
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் படி, தேனி மாவட்டம் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட சார்பு நீதிமன்றங்களிலும், தேனி மாவட்ட நீதிமன்றத்திலும் 09.03.2024 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற உள்ளது.
தேசிய மக்கள் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடைபெற உள்ளது. இதில் மோட்டார் வாகன விபத்து, இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து மற்றும் பண சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள், கல்விக்கடன், வங்கிக்கடன் சம்பந்தமான வழக்குகள், குடும்ப வன்முறை சட்ட வழக்கு, காசோலை வழக்குகள், நுகர்வோர் வழக்குகள், வருவாய் துறை சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
வழக்காடிகள் நேரடியாக பங்கேற்று நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு பிரச்சனைகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆகவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ள வழக்காடிகள் மற்றும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் இந்த 09.03.2024-ம் தேதி நடைபெற இருக்கும் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என தேனி மாவட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி கே.அறிவொளி, தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









