தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் எ. காமாட்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையின் கீழ் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.முகாமில் 92பயனாளிகளுக்கு சுமார்31 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.முகாமில் அரசு பல் துறைகள் சார்பில் திட்ட பயன்கள் குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித் தொகை 24,000 ம், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித் தொகை திட்டத்தின்
கீழ் 5 பயனாளிகளுக்கு 60000 மும். மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு 72000மும், ஆதரவற்ற உதவித் தொகை திடத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு 60,000மும் , இலவச வீட்டுமனை பட்டா 45 நபர்களுக்கும், 2745000 வீதமும், பட்டா மாறுதல் உட்பிரிவு) 2 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், ரு 3386 மதிப்பு கொண்ட விலையில்லா தையல் இயந்திரம் 1 நபருக்கும், ரூ 4425 மதிப்பு கொண்டவிலையில்லா தேய்ப்பு பெட்டி 1 நபருக்கும், தோட்டக்கலைத் துறையின் கீழ் 3 பயனாளிகளுக்கு 10 7940 ரூபாய் மதிப்பீட்டிலும், வேளாண்மை துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு 350 x 2 = 700 வீதமும் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.


You must be logged in to post a comment.