தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் பெரும் பரபரப்பு.

ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர் மன நிலை பாதித்த நிலையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய சிசிடிவி வீடியோ காட்சியால் பெரும் பரபரப்பு.தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவர் இவர் ரானுவத்தில் பணியாற்றி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்று காமயகவுண்டன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சனை இருந்ததாகவும் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் பிரிந்து தனிமையில் இருந்து வருவதாகவும் கடந்த சில தினங்களாக மன நிலை பாதிக்கப்பட்டதுபோல் இருந்ததாக கூறப்படுகிறது. இன்னிலையில் இன்று காமயகவுண்டன்பட்டியிலிருந்து கம்பத்திற்க்கு வந்த வெங்கடேசன் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த கறிக்கடை ஒன்றில் நுழைந்தவர் திடீரென அங்கிருந்த கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது கையை தானே வெட்டி துண்டாக்கியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கையை வெட்டியதும் மற்றொரு கையை யாராவது வெட்டுங்கல் என்று கூறிக்கொண்டே கடையை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த போலிசார் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!