தமிழகம் முழுவதும் தற்போது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே அண்ணாநகர் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.மேலும் பள்ளியில் சேர வரும் மாணவ, மாணவிகளை கிராமம் சார்பில், கௌரவப்படுத்த வேண்டும் என்பதற்காக கிராமத்தில் உள்ள பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர் களும் ஒன்றிணைந்து மாணவர் களுக்கு பூரண கும்ப மரியாதை செலுத்தி, மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். மேலும் கிராம பொதுமக்கள் சார்பாக பள்ளிக்கு தேவையான சிலேடூ, பென்சில், பேனா, பேக் உள்ளிட்ட பொருட்களை மாணவர் களுக்கு சீர்வரிசை சீதனமாக வழங்கினார்கள்.இவ்விழாவில் பள்ளி தலைமைஆசிரியர் பத்மநாபன், துணைத் தலைமையாசிரியர் லட்சுமி, அங்கன்வாடி பணியாளர் தெய்வம், ஆத்தங்கரைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, மயிலாடும் பாறை முன்னாள் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஹேமலதா, மாற்றுத்திறனாளி பயிற்சியாளர் மகேஸ்வரி, கிராம நன்கொடையாளர்கள் தாமோதரன், பாஸ்கரன், ரெகுநந்தன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

You must be logged in to post a comment.