கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் அருகில் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கண்மணி நபிகள் நாயகம் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக கார்ட்டூன் வரைந்ததைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வரும் மக்களுக்கு எதிரான சட்டமான இஐஏ 2020 கண்டித்தும், தேசிய கல்வி கொள்கை வாபஸ் பெறக் கோரியும், இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய லீக் கட்சியினர் தங்களின் கோரிக்கைகளை முழக்கமிட்டும், கோரிக்கை சம்மந்தமான பதாகைகளை ஏந்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய தேசிய லீக் கட்சியின் பெரியகுளம் நகர தலைவர் முபாரக் பாட்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல் கபூர் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் இப்ராஹிம் உஸ்மானி, மற்றும் இஸ்லாமியர் கூட்டமைப்பு சார்பாக வெற்றிமுஸ்தாபா.INTJ. ஷாகுல்ஹமீத் பிரியாணிகடை சேக்.தஸ்திக்.ஹருன்.மாநில செயலாளர் முகமது சாதிக். ஹஜ்ரத்பைசூல். எஸ்டிபிஐ கட்சி பெரியகுளம்.அனைத்து இஸ்லாமியர்கள் அமைப்புக்கள்ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து 1கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள். முக கவசங்கள்.சுமார்.500.பேர்களுக்கு. கபசுர தண்ணி வழங்கினார்கள். சமூக இடைவெளியையும் கடைபிடித்தனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!