சென்னை, குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த லோஹியா (52) என்பவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு தேனி அல்லிநகரம் பகுதியில் குடியிருக்கும் வேல்முருகன் (சாமியார்) என்பவரிம் தனது மகள் திருமணம் தொடர்பாக ஜாதகம் பார்க்க வந்தபோது லோஹியாவின் மனைவிக்கு ஆபத்து உள்ளதாகவும் உடனடியாக தோஷம் கழித்து அதை மாற்றிவிட வேண்டும் என்றும் அதற்கு 10,00,000/- செலவாகும் என்றும் கூறியுள்ளாா்.இதனை நம்பிய லோஹியா பணம் ₹ 5,30,000/-யை வேல்முருகனின் வங்கிக் கணக்கில் செலுத்தினார். மேலும் மாங்கல்ய தோஷம் கழிக்க சுமார் 10 சவரன் தாலிச் செயின் மற்றும் மோதிரங்கள் போன்ற தங்க நகைகளை கொடுத்துள்ளாா்.பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த லோஹியாவும் அவரது அண்ணன் சூர்யாவும் பணத்தை திரும்ப கேட்டு சென்ற நிலையில் இருவரையும் அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி சாா்பு ஆய்வாளா் .ரவிராஜ் ஆகியோர்கள் தலைமையில் போலிசாா் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.