தேனி மாவட்டத்தில் புதிதாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. அதன் முன்னோட்டமாக அடுத்த கல்வியாண்டு
முதல் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையுடன் பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலையில் உள்ள “கல்வி ” இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் தற்காலிக வகுப்புகள் துவங்கப்பட உள்ளன.இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தற்காலிகமாக செயல்பட உள்ள வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன், பதிவாளர் .டென்சிங் ஞானராஜ், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலர் செந்தில் அண்ணா,கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், பெரியகுளம் சார் ஆட்சியர் . சினேகா, வட்டாட்சியர் . ரத்தினமாலா, பெரியகுளம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் .ஆறுமுகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழக துணை முதலமைச்சர் , போடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாடிச்சேரியில் புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிக்கான கள ஆய்வை மேற்கொள்ள உள்ளார்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.