தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் பெரியகுளம் பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்கள் அதிவேகமாக செல்வதை தடுத்தல், அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்றுவதை தவிர்த்தல், அதிக சத்தத்துடன் ஆட்டோவில் ஸ்பீக்கர் பயன்படுத்துவதை தவிர்த்தல்,
சாலை விதிகளை மதித்தல், வன்முறையை தூண்டும் வகையில் ஆட்டோக்களில் வாசகங்கள் எழுதுவதை தவிர்த்தல், சாதியவெளிப்பாட்டின் அடிப்படையில் ஆட்டோக்களில் வர்ணம், மற்றும் Stickerஒட்டுவதை தவிர்த்தல், அதிக கட்டணம் வசூலிப்பதை கைவிடுதல், மது அருந்தி விட்டு ஆட்டோ ஒட்டுவதை கைவிடுதல், அடைமொழி பெயர்களை எடுத்தல் உள்ளிட்ட அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார். உடன் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ் மற்றும் சார்பு ஆய்வாளர்கள்உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.