இந்திய திரு நாட்டில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கார்கில் மாவட்டத்தில், கடந்த 1999ஆம் ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்திவிற்கும் – பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே போர் துவங்கி ஜூலைதம் வரை நடைபெற்றது.இந்த கார்கில் போரில் சுமார் 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், அதிகாரிகளும் தங்களது இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்தனர். இந்நாளை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நாளாகவும் , காயமடைந்த வீரர்களை கௌரவிக்கும் நாளாக மட்டுமின்றி கார்கில் போரில் வெற்றி பெற்ற தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதனடிப்படையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஜி.உசிலம்பட்டி ஊராட்சியில் உள்ள முன்னாள் ராணுவத்தினர்கள் ஒன்றிணைந்து, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தேசியக்கொடியை ராணுவ வீரர்கள் சார்பில் சுவேதர் ராஜேந்திரன் தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தியும், போரில் வெற்றி பெற்ற நாளை கொண்டாடும் விதமாக இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஜி உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமந்திரன் முன்னாள் ராணுவ வீரர் முருகன், ராணுவ வீரர் பன்னீர்செல்வம், நவநீதகிருஷ்ணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.