தேனி மாவட்டத்தில் கொரானா நோய்த் தொற்று ஒரு பக்கம் மக்களை விரட்டிக் கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து பெரியகுளம் தண்டுபாளையத்தில் திமுக கட்சி சார்பில் மின்சார உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளான மக்களைக் காக்கத் தவறிய மாநில அரசு மத்திய அரசு மின் கட்டணம் என்ற பெயரால் அநியாயக் கொள்ளை நடத்திக் கொண்டு வருகிறது எனவும் மத்திய
பிரதேசம் கேரளா, மகராஷ்டிரம் ஆகிய மாநில அரசுகள் அம்மாநில மாக்களுக்கு மின் கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளது ஆனால் தமிழக அரசு மக்களிடமிருந்து மின் கட்டண உயர்வை கொண்டு வருகிறது எனவும் மின் கணக்கீடு எடுத்தில் பேரிடரை ஏற்படுத்திவிட்டு அதை சரி செய்யாமல் மக்கள் மீதே கட்டண உயர்வை நிகழ்த்தி வருகிறது மேலும் இத்தகைய தவறுகள் நீக்கப்பட்டு மின் கட்டணத்தை அரசு குறைத்து, குறைக்கப்பட்ட கட்டணத்தை எளிய தவனை முறையில் செலுத்த மக்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறித்தி கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கம் மிட்டு ஆர்ப்பரட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டம் முன்னாள் நகரச் செயலாளர் எஸ் ரவி , மற்றும் நகரத் துணைச் செயலாளர் அப்பாஸ் கான் தலைமையில் திமுக நிர்வாகிகளான பிச்சை , அப்துல் சம்மது , எஸ் வி மணி , சித்திக் , அப்துல் நாசர் , ரியாஸ்தீன் , சாகுல் ஹமீது , ராஜா , சாஹிப், அந்தோனி , சுரேஷ் , முருகன் , முத்துலெட்சுமி , மாரியாம்மாள் கலந்துக் கொண்டனர்
சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


You must be logged in to post a comment.