தனியார் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரியை ரத்து செய்ய கோரிக்கை :

தேனி மாவட்ட அனைத்து தனியார் பள்ளி வாகன உரிமையாளர் நலச் சங்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் காமராஜ் தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர் தேவகுமார், உறுப்பினர்கள் சுதர்சன், ராஜேந்திர பிரசாத், ஜெயராஜ், நடராஜ் ஆகியோர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அவற்றில் உலக நாடுகளை அச்சுறுத்தி உயிர் பலி வாங்கி வரும் கொடிய வைரஸ் நோயான கொரோனாவின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள ஆழலில் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படாமல் உள்ளன. இதனால் அனைத்து பள்ளி வாகனங்களும் இயக்கப்படவில்லை, இருப்பினும் வட்டார போக்குவரத்து மூலம் பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி, பசுமை வரி, இன்சூரன்ஸ் மற்றும் தர உறுதிச் சான்று கேட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்தில் தனியார் பள்ளிகளில் எந்த ஒரு பணியும் செய்யப்படாத சூழல் உள்ளது. ஆகவே சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து .பள்ளி வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் இதர வரிகளை ரத்து செய்திட வேண்டுமாய் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவண்.A சாதிக் பாட்சா. நிருபர்.தேனி. மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!