ஆரணி அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்து தலைமறைவாக இருந்த இருவர் அதிரடி கைது..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் EB நகரைச் சேர்ந்த மூதாட்டி சிந்தாமணி வயது 75 என்பவரை 11.11.2024. அன்று நகைக்காக கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருந்த கொலை குற்றவாளிகள் மதுமிதா வயது 40. கவின் என்கிற வெங்கடேசன் வயது 30 இவர்கள் இருவரும் தலைமறைவாக இருந்ததால்,
இவர்களைப் பிடிக்க வேலூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் தேவராணி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மேற்பார்வையில் ஆரணி டிஎஸ்பி பாண்டீஸ்வரி தலைமையில்,
காவல் ஆய்வாளர்கள் ராஜாங்கம் விநாயகமூர்த்தி உதவி ஆய்வாளர்கள் ஷாபுதீன், அருண்குமார், மகாராணி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கன்ராயன், குமரகுரு ஆகியோர்களை கொண்டு தனிப்படை அமைத்து
10.12.2024 இன்று அதிகாலை சிந்தாமணியை நகைக்காக கொலை செய்த குற்றவாளிகளை பாண்டிச்சேரியில் பிடித்து அவர்களிடம் இருந்த. 1 செயின் 2 வளையல்கள் பறிமுதல் செய்து போளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
You must be logged in to post a comment.