கீழக்கரை பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு வியாபாரிகள் அச்சம்….

இராமநதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக பல கடைகளை உடைத்து சுமார் லட்ச கணக்கான பொருட்கள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் வியாபாரிகள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் 11.9.2020 அன்று இரவு 12 மணிக்குமேல் வள்ளல் சீதக்காதி சாலை இந்தியன் வங்கி எதிரில் உள்ள மாஷா அல்லாஹ் மொபைல் கடையில் சுமார் ஒரு லட்சத்தில் அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள 21 மொபைல் போன் மற்றும் ரொக்கம் அறுபத்தி ஐயாயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிசென்றுவிட்டனர். இதுபற்றி காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக டிஎஸ்பி முருகேசன் தலைமையில் வருகை தந்த காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் அடங்கிய காவலர்கள்,மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள திருமகள் பேன்ஸி ஸ்டோர் மற்றும் முஸ்லீம் பஜாரில் உள்ள ரூபா ஜீவல்லரி ஆகிய இடங்களில் திருடிய கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதனால் மற்ற வியாபாரிகள் பெரும் அச்சத்தில் உள்ளார்கள்.  அந்த மர்மநபர்களை கைது செய்வதில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!