காரியாபட்டி அருகே அரசு பள்ளியை உடைத்து கொள்ளை..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசு பள்ளியில் பூட்டை உடைத்து கணினி உட்பட சுமார் 5 இலட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை.காரியாபட்டி போலிசார் விசாரணை.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பெ.புதுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று இரவு கதவு உடைத்து கொள்ளை போனது தெரியவந்தது. அந்தப்பக்கம் சென்ற பொது மக்கள் கதவு உடைக்கப்பட்ட தகவலை பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராணிக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர்  இரவு காவலர், கண்காணிப்பு கேமிரா இல்லாத இப்பள்ளியில் திருட்டு நடந்ததை உறுதி செய்து, இதுகுறித்து காரியாபட்டி காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தார்.

அங்கு வந்த போலீசார் கொள்ளை விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு பாடம் நடத்த பயன்படுத்தப்படும் புரஜெக்டர், 5 கணினி, 1 மடிக் கணினி உள்பட 5 இலட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது காவல்த்துறை மோப்ப நாய் கை ரேகை, தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதில் திருடப்பட்ட ஒரு கணினி மட்டும் பள்ளியின் பின்புறம் உள்ள கருவேல காட்டுக்குள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மேலும் தலைமையாசிரியர் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து காரியாபட்டி போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!