பென்னாகரம் அருகே சின்னம்பள்ளி யில் தொடர்ந்து பூட்டை உடைத்து திருட்டு பொதுமக்கள் பீதி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த சின்னம்பள்ளியில் நேற்று (14/01/2019) இரவு மர்ம நபர்கள் சின்னம்பள்ளி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் இவரது மனைவி வெள்ளையம்மாள் இவர்கள் உடல்நிலை குறைவால் சேலம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். அப்போது வீட்டில் பூட்டியிருந்த பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 4ஆயிரம் ரூபாய் பணமும் 10ஆயிரம் மதிப்புள்ள வீட்டில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். மருத்துவ மனையில் இருந்து திரும்பி வந்து பார்க்கும்போது வீட்டின் பூட்டு உடைந்து இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த மணிவண்ணன் பெரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் திருட்டு போனது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சின்னம்பள்ளி யில் கடந்த மாதம் தொடர்ந்து 8 வீடுகளில் பூட்டை உடைத்து சுமார் 5லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்து ஒரேபகுதியில் திருட்டு போவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

.தர்மபுரி. செய்தியாளர். என். ஸ்ரீதரன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!