மண்டபத்தில் உள்ள ஆரம்பபள்ளியில் பணம் திருட்டு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஆரம்பப்பள்ளி (தென்கடற்கரை) 24.8.18 ல் வேலை நேரம் முடிந்த பிறகு தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி தனது அறை, இதர வகுப்பறைகளை பூட்டி வீடு திரும்பினார். 25.8.18 (சனி), 26.8.18 (ஞாயிறு) வார விடுமுறைக்கு பிறகு ஆக., 27 காலை பணிக்கு வந்தார். அப்போது தனது அறை கதவின் பூட்டு உடைக்கபட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம், ரூ.500 மதிப்புள்ள பென் டிரைவ் திருடு போனது தெரிந்தது. இது குறித்து தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி புகார்படி மண்டபம் போலீஸ் எஸ்.ஐ., அந்தோணி சகாய சேகர் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

—————/——————/—_____________

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!