துபாய் என்றாலே பிரமாண்டம், உலகத்தில் எல்லா விசயத்திலும் உலகத்தில் முதல் இடம். செயற்கையான கடல் தீவு, உலகத்திலேயே பெரிய உயரமான கட்டிடம், உலகிலேயே மிகப் பெரிய வணிக வளாகம், அதிக அளவிளான வானுயர்ந்த கட்டிடம் என எல்லா விதத்திலும் முதலிடம் வகிக்கும் ஊர்தான் துபாய்
துபாயில் பல நாட்டு மக்கள் சாதாரண வேலையில் இருந்து மேல்மட்ட வேலையில் வரை உள்ளூர் மக்களும், வெளிநாட்டைச் சார்ந்தவர்களும் செய்து வருகிறார்கள். அதே போல் அனைவரும் பயன் பெறும் வகையில் துபாயில் எத்திசை நோக்கினாலும் வணிக வளாகங்களை காணலாம்.
அதன் வரிசையில் சமீபத்தில் துபாய் ஜெபல்அலி பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளதுதான் “THE OUTLET VILLAGE”. இந்த வணிக வளாகம் ஐரோப்பிய் நாட்டின் கட்டிட கலையுடன், பழங்காலத்து நகர அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு உலகத்தில் உள்ள முன்னனி நிறுவனத்தின் நேரடி விற்பனை வளாகங்கள் அமைக்கப்பட்டு, அனைத்து விதமான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைந்து உள்ளது என்பது, இந்த வளாகத்தின் சிறப்பாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print






















