தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கினார் மேலும் இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் அருள் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் ஜெயராம் துணை பதிவாளர் பொது விநியோகம் திட்டம் மற்றும் திருவெறும்பூர் தாசில்தார் ஜெயப்பிரகாசம், மாவட்ட வழங்கள் அலுவலர் பொறுப்பு உதயகுமார் திருவரம்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். திருச்சி செய்தியாளர் H.பஷீர்

You must be logged in to post a comment.