உசிலம்பட்டியில் கடந்த வாரம் கொரோனா வைரஸ் நோய் அச்சத்தை காரணம் காட்டி அலட்சியம் செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் குழந்தை இறந்த சம்பவத்தின் எதிரொலியாக
பாதிக்கப்பட்ட உசிலம்பட்டி அருகே செட்டியபட்டி தவசி குடும்பத்தினரை தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் இரவிந்திரநாத்குமார் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நீதிபதி ஆகியோா் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். மற்றும் இனி மேல் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் .தவசி கூறினார்…துக்கத்தில் உள்ளோருக்கு ஆறுதல் கூறிய தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் அவர்களுக்கும் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அவர்களுக்கும் பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


You must be logged in to post a comment.