அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது . இந்த பேரவைக்கு யூ. காதர் உசேன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி நிறைவுறையாற்றினார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர் ,பேராசிரியர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல். விஜய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேரவையில் புதிய மாநகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் . தலைவராக பி .அருண்,துணைத் தலைவர்களாக சதாசிவம் ,ஆலம் கான் ,பாலச்சந்தர், செயலாளராக ஹரி பிரசாத் ,துணை செயலாளராக பிரவீன், அலெக்சாண்டர், சுரேந்தர், பொருளாளராக காதர்உசேன், உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாநகர குழு தேர்வு செய்யப்பட்டனர் . பேரவையில் கீழவாசலில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மார்க் கடையை உடனே அகற்ற வேண்டும். விளார்ரோடு அண்ணா நகர் பகுதிகளில் சுற்றி தெரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும், விளார்ரோடு பூச்சந்தையில் இருந்து பர்மா காலனி வரைக்கும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை அகலப்படுத்தப்பட வேண்டும் போன்ற தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

You must be logged in to post a comment.