தஞ்சை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும், பயணிகளுக்கு இருக்கைகள் அமைத்திட வேண்டும், கடைக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் , கட்டண கழிப்பறையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், யூனியன் கிளப் கட்டடத்தை சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தஞ்சை மாநகராட்சியை கண்டித்து சங்கு ஊதும் போராட்டம் 16 .10. 2024 அனறு காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையொட்டி இன்று தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது .
வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் முன்னிலையில், தஞ்சை மாநகராட்சி சார்பில் டிபிஓ முரளி ,உதவி பொறியாளர் வெங்கடேசன், மனோகரன் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் முத்துக்குமாரன். தியாகு ,காதர் உசேன், அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அமைதி பேச்சுவார்த்தையில் தஞ்சை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் 30 ,9 ,2024 அன்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைத்திடவும் இருக்கைகள் அமைக்க பணி துவக்க ஆணை வெளியிடப்பட்டு மூலப்பொருட்கள் தயார் செய்யப்பட்ட வருகிறது. இப்பணி சுமார் 30தினங்களுக்குள் முடிக்கப்படும் ,பேருந்து நிலையத்தில் உள்ள கடை உரிமையாளர்களால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரப்புகளை வாரம் ஒரு முறை அகற்றப்படும் ,மேலும் இருக்கை மற்றும் நிழற்குடை அமைக்கும் பணி நிறைவுற்ற பின் ஆக்கிரமிப்பு முழுமையாக கலையப்படும்,பேருந்து நிலையத்துக்கு ஒரு சுகாதார அலுவலர் நியமனம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .நியமனம் செய்த பின் கழிவறைகள் உரிய முறையில் பராமரிக்கப்படும் ,கட்டணம் குறித்த விளம்பர பதாகை வைக்கப்படும் ,யூனியன் கிளப் தரப்புக்கும் .தஞ்சாவூர் மாநகராட்சிக்கும் இடையே வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் மேற்படி வழக்கு முடிந்தவுடன் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என மாநகராட்சி சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் தொடர்புடைய மேற்கு கால்நிலையை காவலர்கள் மூலம் பேருந்து நிலையத்தினை தொடர்ந்து கண்காணித்து சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் உரிய நடவடிக்கை எடுக்க வட்டாட்சியரால் தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளருக்கு அறிவுறுத்தப்பட்டது . இதனை ஏற்றுக்கொண்டு சமாதான பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கையெழுத்து இட்டனர். இதனால் நாளை மாநகராட்சியை கண்டித்து நடைப்பெற இருந்த சங்கு ஊதும் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.