மீனாட்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மேம்பட்ட சிகிச்சை. எலிக்கொல்லி விஷத்தில் இருந்து 14 வயது சிறுமியை காப்பாற்றியுள்ளது பல்துறை சார்ந்த முக்கிய சிகிச்சை மற்றும் பிளாஸ்மாஃபெரிசிஸ் எனப்படும் மேம்பட்ட சிகிச்சை முறையின் வருகையால், டெல்டா பகுதியில் கடந்த 15 முதல் 2 ஆண்டுகளாக எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது.
தஞ்சாவூர் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பலதுறை முக்கிய சிகிச்சை பிரிவைக் கொண்ட முதல் மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, மிகவும் கொடிய எலிக்கொல்லிய உட்கொண்ட ஒரு 14 வயது சிறுமிக்கு, இரத்த ஓட்டத்தின் சுழற்சியில் இருக்கும் நச்சுகளை அகற்றும் ஒரு மேம்பட்ட இரத்த சிகிச்சையான பிளாஸ்மாஃபெரிசிஸ் சிகிச்சையை அளித்து அச்சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. மன அழுத்தத்தில் இருந்த அச்சிறுமி, மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படும் மஞ்சள் பாஸ்பரஸை 5% கொண்டுள்ள ரடோல் பேஸ்டை உட்கொண்டிருந்தாள். மஞ்சள் பாஸ்பர்ஸ் என்பது சயனைடு போன்ற அதிக புரதம்-பிணைக்கும் பொருளாகும். மனித உடலில் இருந்து அதை அகற்றுவது ஒரு பெரும் சவாலாக இருப்பதால், கிராமப்புறங்களில் எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிக அளவில் உள்ளது.வழக்கமாக விஷம் உட்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில், இரத்தத்தைச் சுத்திகரிக்க சில வகையான டயாலிசிஸ் (ஹீமோடயாலிசிஸ் அல்லது ஹிமோபெர்ஃபியூஷன்) மேற் கொள்ளப்படுகிறது. இருப்பினும், மீனாட்சி மருத்துவமனை ஹீமோடயாலிசிஸ் அல்லது ஹீமோபெரஃபியூஷன் போன்று குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இதயத் துடிப்பு போன்ற சிக்கல்களை உருவாக்காத பிளாஸ்மாஃபெரிசிஸ் சிகிச்சையை மேற்கொண்டது. பிளாஸ்மா பரிமாற்றம் என்றும் அழைக்கப்படும் பிளாஸ்மாஃபெரிசிஸ். இந்த எலிக்கொல்லி விஷத்திற்கு மிகத் திறம்பட்ட விதத்தில் பலனளிப்பதாக இருக்கும். இது பாதிக்கப்பட்ட இரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மாவை இரத்த அணுக்களிலிருந்து பிரித்து, அதை ஒரு சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி நல்ல பிளாஸ்மா அல்லது பிளாஸ்மா மாற்று கொண்டு மாற்றியமைக்கும் முறையாகும். இச்செயல்முறை சிறுநீரக டயாலிசிஸ் போன்றது.மீனாட்சி மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் டாக்சிகாலஜி பிரிவுத் தலைவர் டாக்டர் T. செந்தில் குமார், நோயாளியைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், நோயாளி தனது தனிப்பட்ட பிரச்சனை மற்றும் மனச்சோர்வு காரணமாக எலிக்கொல்லியை உட்கொண்டதாகத் தெரிவித்தார். உட்கொண்ட நான்கு நாட்களுக்குப் பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி போன்ற உபாதைகளைக் கொண்டிருந்ததால், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நோய் கண்டறிதலின்போது மஞ்சள் காமாலை மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளை நாங்கள் கண்டறிந்தோம். சிறுமி உட்கொண்ட எலிக்கொல்லி அதிக புரதம் பிணைக்கும் நச்சுப்பொருளான மஞ்சள் பாஸ்பரஸ் 3% கொண்டிருப்பதால், நாங்கள் உடனடியாக பிளாஸ்மாஃபெரிசிஸைப் பயன்படுத்தினோம். இந்த இரத்த சிகிச்சையின் மூன்று சுழற்சிகளுக்குப் பிறகு அவரது உடல்நிலை மேம்பட்டதுடன், மஞ்சள் காமாலையும் படிப்படியாகக் குறைந்தது. பின்னர் மற்ற சிக்கல்களுக்கும் நாங்கள் சிகிச்சை அளித்தோம். சிகிச்சையைத் தொடர்ந்து சிறுமி பிரதானமாக உளவியல் சார்ந்த நல மீட்புக்காக மருத்துவமனையில் தங்கி, ஓர் ஆரோக்கியமான சிறுமியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.கிரிட்டிக்கல் கேர் சேவைகளின் முன்னேற்றம் குறித்து டாக்டர் செந்தில் குமார் கூறுகையில், “நாங்கள் விஷ பாதிப்புக்கு சிகிச்சை அளித்து முழுமையான பராமரிப்பை வழங்குகிறோம். மிகவும் பொதுவான விஷங்களில் பூச்சிக்கொல்லிகள் (ஆர்கனோபாஸ்பேட்) மற்றும் எலிக்கொல்லிகள் (மஞ்சள் பாஸ்பரஸ்) ஆகியவை அடங்கும். இன்றும், மஞ்சள் பாஸ்பரஸ் அதிக இறப்புக்குக் காரணமாகிறது. ஆனால் மக்கள் பொதுவாக நினைப்பது போல் இது குணப்படுத்த முடியாததல்ல. எங்களது பலதுறை சார்ந்த அணுகுமுறை மற்றும் பிளாஸ்மாஃபெரிசிஸ் போன்ற நடைமுறைகள் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைத்துள்ளோம். இருப்பினும், நோயாளிகளுக்கு நீண்டகால நிவாரணத்தை உறுதி செய்வதற்காக, 24 மணி நேரமும் உன்னிப்பான கவனிப்பை வழங்கும். மனநல மருத்துவர்கள் மற்றும் உளவியலாளர்கள் உள்ளிட்ட பலதுறை சார்ந்த கிரிட்டிகல் கேர் குழுவைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானது. கிரிட்டிகல் கேர் குழு எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குகிறதுமீனாட்சி மருத்துவமனையின் கிரிட்டிகல் கேர் மெடிசின் மற்றும் டாக்சிகாலஜி பிரிவு பல்வேறு துறைகளிலும் உள்ள அனைத்து ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டிகளின் ஆலோசகர்களின் துணை கொண்ட தகுதிவாய்ந்த கிரிட்டிகல் கேர் மருத்துவர்களால் வழிநடத்தப்படுவதாகும். இந்தப் பிரிவு நச்சுயியல் நோயாளிகளுக்கு மட்டுமின்றி, கரோனரிகார்டியாலஜி, நரம்பியல், நெஃப்ராலஜி. மகப்பேறியல் துறைகளில் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், அத்துடன் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய, அறுவை சிகிச்சை சார்ந்த கிரிட்டிகல் கேர். மற்றும் விபத்து சிகிச்சை நோயாளிகளுக்கும். ஒவ்வொரு நிமிடமும் நோயாளிகளின் ஆரோக்கிய மேம்பாட்டைக் கண்காணிக்கும். அனைத்து சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட உபகரணங்கள் கொண்டு 2 விரிவான கவனிப்பை வழங்குகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









