தஞ்சையில் வசித்து வரும் தஞ்சை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபுராஜ்குமார் தனது அலுவலக பணியாளர்களுடன் தஞ்சையில் உள்ள ஹோட்டலுக்கு உணவருந்த சென்றார். ஹோட்டலில் இலை எடுக்கும் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டும் அதோடு அவர்களுக்கு கிஃபட் வழங்கி மகிழ்ச்சியில் திளைக்க வைக்க வேண்டும் என நினைத்தார். தாங்கள் சாப்பிட்ட இலைக்கு அடியில் கவர் ஒன்றை வைத்தார்.சாப்பிட்டு முடித்ததும் வழக்கம்போல் இலை எடுத்த பெண்கள் கவர் ஒன்று இருப்பதை கண்டு எடுப்போமா?வேண்டாமா? என யோசித்த நேரத்தில் உங்களுக்கு தான் என செயலாளர் கூறியதும் கவரை பிரித்து பார்த்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பெண்கள். 100 ரூபாய் நோட்டுகள் கட்டாக இருந்ததை கண்டு முகம் மலர எண்ணியபோது 5000 ரூபாய் இருந்ததும் சமூக ஆர்வலர் முகத்தை பார்த்தனர். வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு டிப்ஸ் என கூறி கூடுதலாக ஒரு புடவையும் பரிசாக கொடுத்து மகளிர் தின வாழ்த்துகள் கூறி சென்றார். இந்நிகழ்ச்சி தஞ்சையில் உணவு அருந்த வந்தவர்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You must be logged in to post a comment.