மகப்பேறு காலத்தில் மரணம் அடைந்த மருத்துவர் அஞ்சுதாவின் குடும்பத்திற்கு நிதி உதவி !

.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த மருத்துவர் அஞ்சுதா கடந்த 30.04.2024 அன்று மகப்பேறு காலத்தில் துயர மரணம் அடைந்தார். அதனை தொடர்ந்து இன்று அவரது இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக திரட்டப்பட்ட ரூபாய் 7,25,000/- ஏழு இலடத்து இருபத்தி ஐந்தாயிரம் காசோலையை மருத்துவர் அஞ்சுதாவின் தாயார் தமிழரசி, கணவர் கார்த்திக் மற்றும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதார மாவட்டம் ஏற்பாடு செய்திருந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் கார்த்தீஸ்வரன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மு.அகிலன், மாநில பொருளாளர் டாக்டர் ரங்கசாமி,புதுக்கோட்டை, அறந்தாங்கி சுகாதார மாவட்ட செயலாளர் டாக்டர் இராம்சந்தர், மாநில இணை செயலாளர் டாக்டர் மகேஷ்குமார், கறம்பக்குடி தலைமை மருத்துவர் டாக்டர் சத்யா, வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் பஜருல் அகமது, டாக்டர் அருள், டாக்டர் மணிமாறன், டாக்டர் சரவணன், புதுக்கோட்டை மகளிர் அணி பொறுப்பாளர் டாக்டர் சித்ரா, கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் அஸ்வினி, புதுக்கோட்டை அறந்தாங்கி சுகாதார மாவட்டங்களை சார்ந்த மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள்,குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்,ஊடக நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மு. அகிலன் அவர்கள் இரங்கல் உரையாற்றினார். மிகவும் எளிமையான பின்னணியில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவம் பயின்று மருத்துவராக பணிபுரிந்த அஞ்சுதா மற்றும் இரட்டைக் குழந்தைகளின் துயரச் செய்தி கேட்டு செய்தி கேட்டு அவருடைய குடும்ப நலன் கருதி நிதி திரட்டும் முயற்சிக்கு ஆதரவு அளித்த அரசு மருத்துவ அலுவலர்கள்(service)மற்றும் அரசு சாரா மருத்துவர்கள் (non service), நண்பர்கள் அனைவருக்கும் மாநில பொருளாளர் ரங்கசாமி அவர்கள் நன்றி தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!