தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை உட்பட்ட மத நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்ற தஞ்சாவூர் மாநகராட்சி 39 வது வட்டத்தில் உள்ள அண்ணா நகர் 20 ம் தெரு அருகில் உள்ள மசூதி மற்றும் அண்ணா நகர் 16வது,17ம் தெருக்கும் இடையில் உள்ள அருள்மிகு அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம் மற்றும் அண்ணா 19வது தெரு அருகில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள்சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லை முடியும் , விளார் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கி கிடந்த குப்பைகளும் அகற்றப்பட்டது .
அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயமும் சுத்தம் செய்யப்பட்டு அரச மரத்தின் கிளைகள் அகற்றப்பட்டது.
இப்பணியினை சிறப்பாக செய்த தஞ்சாவூர் மாநகராட்சி 39 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம். உஷா . தஞ்சை மாநகராட்சி ஆணையர் கண்ணன், தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர் ஆகியோர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.




You must be logged in to post a comment.