தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட தீயணைப்பு பணித் துறை தலைவர் குமார் தலைமையேற்று தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்த விளக்கவுரை அளித்தார், இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன் மற்றும் குழுவினர்களால் பணியாளர்களுக்கு ஆதார் தீத்தடுப்பு குறித்தும், தீயணைப்பான்களை கையாளுவது குறித்தும், சமையல் எரிவாயு தீத்தடுப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சரவண வேல், மருத்துவமனையின் பொது மேலாளர். டாக்டர் பாலமுருகன், மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் செல்வ பாண்டி அவர்களும் கலந்து கொண்டனர். இதில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

You must be logged in to post a comment.