தஞ்சாவூரில், சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி
.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பேரணி தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை பனகல் பில்டிங் சென்றடைந்தது.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309 ன் படி புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
மத்திய அரசின் சோம்நாத் கமிட்டி அறிக்கை மற்றும் ஆந்திர மாநில அரசின் ஓய்வூதிய திட்டம் இரண்டில் எது தமிழ்நாட்டிற்கு பொருத்தமானது என்பதை தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என்ற 22.7.2023 அன்று மாண்புமிகு நிதியமைச்சர் அறிவித்தபடி முடிவை அறிவித்து விட வேண்டும் பணிக்கொடை வழங்க வேண்டும்,, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த பேரணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். சுரேஷ் குமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டதலைவர் பாலாஜி ஆகியோர் தலைமை வகித்தனர். இனண ஒருங்கிணைப்பாளர் செபஸ்டின் வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் குமாரவேலு துவக்க உரையாற்றினார்.
அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், சண்முகம். மாரியப்பன், செந்தில்நாதன், முகமது ஹிதயதுல்லா, ஜெயசித்ரா மற்றும் திருவாரூர் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ,செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க பொது மற்றும் துறைவாரி சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பொதுசுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் இளங்கோவன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் விஜய பாஸ்கர், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயலாளர்கள் தன்ராஜ், கார்த்திக் மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரபோஸ், தனசேகர் மற்றும் தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நிறுவனத் தலைவர் எஸ். தமிழ்ச்செல்வன் சிறப்பு உரையாற்றினார்.
பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க | மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் நிறைவுறையாற்றினார் .
சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தஞ்சை மாவட்ட நிதி காப்பாளர் தினேஷ்குமார் நன்றியுரை கூறினார்.
You must be logged in to post a comment.