தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் தாலுகா பகுதியில் தொடர் கனமழையால் நெற்கதிர்கள், நெல் பயிர்கள், கடலை பயிர்கள் என பல ஏக்கர் சேதம் அடைந்துள்ளது. இது தொடர்பாக 27.12.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வி.கே.சின்னத்துரை தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இடைப்பழம் நோய் தாக்கப்பட்ட நெல் கதிர்கள் மற்றும் பயிர்களுடன் சென்று ஆட்சியரிடம் பயிர்களை காண்பித்து உரிய அரசு நிவாரணமும், காப்பீடு செலுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு நிறுவனம் மூலம் இழப்பீட்டு தொகையும் பெற்றுத்தர கோரிக்கை வைக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.ஆறுமுகம், பேராவூரணி ஒன்றிய தலைவர் எம். கோபிநாத், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் எம். பெரியசாமி உள்ளிட்ட பல விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-ஏ.கே.சுந்தர், தஞ்சாவூர்.
You must be logged in to post a comment.