ஊர்ப் பெயர்களை மாற்றி இன்றைய சூழலில் இவ்வளவு அவசரமாக இதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?தங்கம் தென்னரசு கேள்வி!

ஊர்ப்பெயர்களை இஷ்டத்துக்கு மாற்றிய விவகாரத்தில், அறிவிக்கை வெளியிட்ட தமிழ் வளர்ச்சித் துறை கடும் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கின்றது.

திமுக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் தற்போது திருச்சுழி சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு.

கொரொனா தொற்று குறித்த மக்களின் எதிர்மன நிலையைத் திசை திருப்பும் முயற்சியாகவே இந்த அறிவிப்பு அமைந்திருக்கின்றதே தவிர, குழப்பங்களும், பிழைகளும் மலிந்ததாக இருக்கின்றது. இன்றைய சூழலில் இவ்வளவு அவசரமாக இதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசாணை/ அறிவிக்கையைத் தமிழ் வளர்ச்சித்துறை இணைய தளப் பக்கத்தில் ஏன் இன்னும் வெளியிடவில்லை.

இத்தகைய குற்றச்சாட்டுகள் தமிழக அரசின் மீது பரவலாக வைக்கப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் திரு. பாண்டியராஜன் அவர்களோ துறை அதிகாரிகளோ இதுவரை ஏன் முழுமையான விளக்கத்தைத் துறை மூலம் அளிக்கவில்லை?.

தமிழ் வளர்ச்சித் துறை மெளனம் கலைத்து உரிய விளக்கத்தை அளிக்க முன்வருமா?

அல்லது,

இப்படி ஒன்று வெளிவந்ததே தங்களுக்குத் தெரியாது என கையை விரித்துவிடப் போகின்றதா?

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!