தூத்துக்குடியில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு மருத்துவமணையில் சிகிச்சைப் பெறும் பொதுமக்களை, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நடிகர் ரஜினி காயம்பட்ட வர்களை சந்தித்த பின்பு போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என கொச்சைப்படுத்தியது TV களில் பரப்பரப்பாக ஓடிக் கொண்டிருந்த நிலையில் தமிமுன் அன்சாரி MLA மருத்துவமனைக்கு வந்து காயம்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
தமிம் அன்சாரியிடம் காயம் அடைந்தவர்கள் கண்ணீர் மல்க போலீஸாரின் அராஜகத்தை சுட்டிக் காட்டினர். 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி அங்கு பெரிய கட்டோடு உட்கார்ந்திருந்தார். அவரை விசாரித்தப்போது, போலீஸார் அவரது கையைப் பிடித்து முறுக்கி அடித்ததாக தழுதழுக்க கூறினார்.
அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய தமிமுன் அன்சாரி, கடைசிவரை மஜக உங்களுக்காக குரல்கொ டுக்கும் என்றார். பின்னர் அவர் வாயில் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி இறந்த 18 வயதே ஆன ஸ்னொலின் வீட்டிற்கு சென்று, அவரது பெற்றோர்க்கு ஆறுதல் கூறினார். அதன் பிறகு #பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் கூறியதாவது,” தூத்துக்குடியில் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்ட போலிஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். மண்ணூரிமைக்காக போராடியவர்களை மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். தூத்துக்குடியில் போலிஸார் பொதுமக்களை வீடுதோறும் சென்று மிரட்டுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. குறிப்பாக இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து புகார்கள் வருவதால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். மேலும் தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க_ழ வேண்டும்” என்றார்.
அவருடன் மஜக மாநிலத் துணைச்செயலாளர் புளியங்குடி செய்யது அலி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஹாரிஸ், தூத்துக்குடி (தெற்கு) மாவட்ட செயலாளர் ஜாகிர், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் நவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் காயல் சாகுல், திருச்சி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இக்பால், நெல்லை மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஷாஜகான், தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் நஜிப், MJTS மாவட்ட செயலாளர் ராசிக் முஸம்மில், மாவட்ட வழக்கறிஞர் செயலாளர் ஜெய்லானி BABL, தூத்துக்குடி, காயல்ப்பட்டினம், ஆத்தூர் நகர ஒன்றிய கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











