தைப்பூசம் : பக்திக்கடலில் மிதந்த திருச்செந்தூர்..

திருச்செந்துர் தைப்பூச விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பக்திக்கடலில் மிதந்தது திருச்செந்தூர்.  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3.00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. காலை 6.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி மற்றும் பகல் 12 மணிக்கு சுவாமிக்கு தைபூச மண்டகபடி மண்டபத்தில் அபிஷேகம்,அலங்காரம் மற்றும் வீதி உலா நடைபெற்றது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதல் கடலில் புனித நீராடி மற்றும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊர்காவல்படையினர், ஆயுதபடை காவலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!